BREAKING NEWS

இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 15-25 கி.மீ ஆக இருக்கும்.