BREAKING NEWS

சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு ‘எம்பர்’ எச்சரிக்கை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு ‘எம்பர்’ எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat Index) அபாயகரமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் நாளை (13) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ‘எம்பர்’ (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் இந்தக் கடும் வெப்பம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution Level) உயர்ந்துள்ளதால், பின்வரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

உடல் சோர்வு: நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது வேலை செய்வதோ கடுமையான உடல் சோர்வை உண்டாக்கும்.

தசைப்பிடிப்பு: வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தசைப்பிடிப்புகள் (Heat Cramps) ஏற்படக்கூடும்.

இந்தக் கடும் வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ளப் போதியளவு நீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.