இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (21) பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் முதல் கொழும்பு, காலி வழியாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும்.
காலை வேளையில் மத்திய, சபரகமுவ, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
காற்றின் திசை மாறுபட்டுக் காணப்படும் அதேவேளை, வேகம் மணிக்கு 20-30 கி.மீ. ஆக இருக்கும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடல் பகுதிகள் பொதுவாக அமைதியாக இருந்தாலும், மழை நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.