இலங்கையின் சில பகுதிகளில் நாளை (மார்ச் 25) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதிகாலை வேளையில் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.