BREAKING NEWS

இன்றைய வானிலை அறிவிப்பு

PR
priya priya punidha in வானிலை
Report
இன்றைய வானிலை அறிவிப்பு

இன்று (12) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

அதன்படி, நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

வட மாகாணத்தில் சில தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.