2026 ஆம் ஆண்டு நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கோப்பையில், சூப்பர் 8 சுற்றில் இருந்து வெளியேறிய சிம்பாப்வே கிரிக்கெட் அணி, தனது தாயகத்திற்குத் திரும்புவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளதால், சிம்பாப்வே அணி பயணம் செய்யவிருந்த விமான சேவை தாமதமாகியுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில், சர்வதேச கிரிக்கட் சபை (ICC) சிம்பாப்வே அணியினர் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கான மாற்று வழிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றது.
நேற்று (01.03.2026) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 8 போட்டியுடன் சிம்பாப்வே அணியின் 2026 உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.