யாழ்ப்பாணம் மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்து, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.