வானில் நாளை(07) அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது.
இரத்த நிலவு (Blood Noon) என்று அழைக்கப்படும் இந்த கிரகணம், இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.
இது 82 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முழு கிரகணம் 18:30க்கு ஆரம்பமாகி 19:52 வரை நீடிக்கும் .
பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது.
சூரிய ஒளி வளிமண்டலத்தின் வழியாக படிந்து, அதற்கு ஒரு சிவப்பு நிற ஒளியைக் கொடுக்கும்.
மேலும் இந்த காட்சியை உலக மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதத்தினர் அவதானிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தைத் தெளிவாக அவதானிக்க முடியும்.