இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (6) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
எந்தவொரு ஊழியரும் தன்னார்வ இழப்பீட்டுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று மின்சார சபையின் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
சட்டப்படி வேலை செய்வதற்கான தொழிற்சங்க நடவடிக்கை அதன் முதல் கட்டமாக 15 ஆம் திகதி நள்ளிரவு வரை தொடரும்.
மின்சார சபையை மறுசீரமைப்பதில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற அணுகுமுறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் அமைச்சருடனும் இதுகுறித்து விவாதித்த போதும் வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.