இன்று அதிகாலை காசா நகரில் கடுமையான குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முற்றுகையிடப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தின் மிகப்பெரிய பகுதியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக பலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அடுத்த மாதம் நியூயோர்க்கிற்கு பயணிக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காசா நகரில் இஸ்ரேலிய நடவடிக்கையால் ஒரு மில்லியன் மக்களை மீண்டும் இடம்பெயரச் செய்யக்கூடும் என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிறுவனம் எச்சரித்துள்ளது.