சுது அரலிய விருந்தகத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத பகுதியை அகற்றுவதாக டட்லி சிறிசேன அறிவிப்பு
அங்கீகரிக்கப்படாத கட்டுமானமாக அடையாளம் காணப்பட்ட சுது அரலிய விருந்தகத்தின் ஒரு பகுதியை அகற்றுவதாக தொழிலதிபர் டட்லி சிறிசேன அறிவித்துள்ளார்.
ஹிங்குராங்கொடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி அந்தப் பகுதியை தனிப்பட்ட முறையில் அகற்றுவதன் மூலம் சட்டத்திற்கு இணங்குவதாகவும், விருந்தகத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்பதிவுகள் மே மாதம் வரை தொடரும் என்றும் கூறினார்.