யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வொன்றை நாளைய தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் கிருபாகரன், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், நேற்றுவரை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 213 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், 231 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.