இலங்கையின் நீதித்துறை, டிஜிட்டல் மயமாக்கலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை டெபிட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு நேற்றுமுதல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எதிர்காலத்தில், இந்த திட்டத்தை நீதிவான் நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்றம் வரை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.