முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ்
மாஅதிபராக நியமித்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனுக்கள் , தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது,இந்த மனுக்களை பெப்ரவரி 12 ஆம் திகதி விசாரணை செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை , இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் உட்பட தரப்பினர் 9 மனுக்களை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது