சூடான் நிலச்சரிவு

வடக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில், ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவு படைக்கும் இடையே அதிகார மோதல் நடைபெற்றுள்ளது. 

நிலச்சரிவில் 1000 பேர் உயிரிழப்பு - கிராமமே தரைமட்டமானதில் ஒருவர் மட்டும் பிழைப்பு | 1000 Dies In Sudan Landslide Only One Survivor

இந்நிலையில், அங்குள்ள மேற்கு டர்பார் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, நேற்று அங்குள்ள மர்ரா மலைகளில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் சூடான் விடுதலை ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உதவுமாறு சூடான் விடுதலை ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது. 

நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன. கிராமமே முற்றிலும் அழிந்து விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், சுமார் 1,50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரின் காரணமாக பலரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி மலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *