நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 1:38 அளவில், நீர்கொழும்பு – குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.