முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடகங்களுக்கு தனது நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய ரணில் விக்ரமசிங்க, தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளதுடன், அனைவரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.