வெளிநாடுகளில் தொழில் தேடுவோர், அங்கீகரிக்கப்படாத முகவர்கள் அல்லது இடைத்தரகர்களுடனான தொடர்புகளைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்புகளுக்குப் பணம் செலுத்துவது அல்லது எந்தவொரு கட்டணத்தையும் கோருவது சட்டவிரோதமானது என்று பணியகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் அனைத்தும், இணைய வழியாகவே சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற நிலையில், விண்ணப்பத்தாரிகளை விழிப்புடன் செயற்படுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.