குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட குறித்த மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை – செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையகத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயிற்சியை தொடங்கினார்.
2024ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
இலங்கை – தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (03) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடி சென்றடைந்தனர். இவர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார்