2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன்
ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எஞ்சிய சிறுபோக அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது.