Month: October 2025

வெளியாகியது பரீட்சை பெறுபேறுகள்! மாணவர்கள் சந்தோஷத்தில்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஸ்கெலியா தொழிற்சாலையில் தீ விபத்து

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் – வாழமலை பிரிவில் உள்ள தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை முற்றாக தீக்கிரயைாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க தோட்ட தொழிலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள்…

அறிமுகமாகிறது புதிய சலுகை!பேருந்து கட்டணத்தை செலுத்துவதில் எளிய வசதி

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில், பயணிகள் வங்கியால் வழங்கப்பட்ட டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்…

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வசதி

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் 1,400 புதிய வீட்டு அலகுகளை அமைத்து, பயனாளிக் குடும்பங்களை குடியேற்றுவதற்கு…

முதுகு வலி குணமாக தவளைகளை விழுங்கிய பெண்

சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

புதிய சட்டம் அமுலாகிறது! சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படவுள்ளது. சிறுவர்களின் சிறுவர் பராயத்தை சீர்குலைக்கும் வகையில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாக டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் சிறுவர்கள், மன அழுத்தங்களுக்கு உள்ளான வீதம் குறைவாக இருந்ததாகவும் தற்போது சமூக ஊடக…

பன்றி காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு: அதி விசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் பல பிரதேசங்களில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாட்டின் அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்…

வரலாற்றில் இடம்பிடித்த மட்டு வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக குறித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஒருவருக்கே குறித்த சிகிச்சை…

தீபாவளி தினம் இனி விடுமுறை பட்டியலில் இணைப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom) அறிவித்துள்ளார். இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும்,…

ஆறு நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கூற்றுப்படி, ஒரு நாளைக்கு சராசரியாக 5,299 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு…