Month: October 2025

வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் இந்த கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகநபர் மஹரகம நாவின்ன பகுதியில் கைது செய்யப்பட்டதாக…

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கொழும்பில் பலத்த பாதுகாப்பு

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் நபரை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் வெலிகம பிரதேச சபை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை பகுதியில் நபர்…

வெறுமனே 30 ஊழியர்களுடன் 30 பில்லியன் டொலர் பேரரசை உருவாக்கிய டெலிகிராம்

சுமார் 30 பில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனமாக டெலிகிராம் செயலி செயற்படுவதாக அதன் ஸ்தாபகர் தெரிவித்துள்ளார். வெறுமனே 30 ஊழியர்களுடன் டெலிகிராம் 30 பில்லியன் டொலர் பேரரசை கட்டமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகவும் திறமையான தொழில்நுட்ப நிறுவனமாக டெலிகிராம் திகழ்கிறது.…

அரச மருத்துவமனைகளில் மருந்தாளர் தட்டுப்பாடு : நோயாளர்கள் சிரமத்தில்!

நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவமனைகளில் 1000-க்கும் மேற்பட்ட மருந்தாளர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக, அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்கள் மருந்துகளைப் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐந்து…

சீரற்ற காலநிலை – 29,414 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். இதேவேளை, 11…

வடக்கில் இன்று மின் தடை – மக்கள் அசௌகரியத்தில்

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது மின் தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் தடை…

வெலிகந்த பகுதியில் வேன் விபத்து – ஒருவர் பலி

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகந்த கட்டுவன்வில வீதியில் அத்துகல பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு, கட்டுவன்வில நோக்கிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது காயமடைந்த வேனின்…

பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு…

போலி WhatsApp குழு : கல்வி அமைச்சு எச்சரிக்கை!

போலியான WhatsApp குழு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. (Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் குறித்த WhatsApp குழுவானது, கல்வி…

மக்களே அவதானம் – இன்றும் கடும் மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக…