Month: October 2025

கோழி திருடர்கள் கைது

கோழிப் பண்ணையிலிருந்து ரூ.223,200 பெறுமதியுள்ள 186 கோழிகளைத் திருடியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸ் தெரிவித்துள்ளது. ருஹுணுகம, கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 18-32 வயதுக்குட்பட்ட நால்வரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட 186 கோழிகளில் 90 கோழிகள் மீட்கப்பட்டுள்ளன.…

ஊடகவியலாளர்கள் மீது தொடரும் தாக்குதல்

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 ஊடகவியலாளர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, 2010 முதல் இதுவரையில், ஒரு கடத்தல் சம்பவமும் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக…

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி – விலையில் அதிரடி வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது. அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை , இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி வரை…

நுவரெலியா அஞ்சல் நிலையத்திற்குஆபத்து

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து மழையில் நனைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் நிலையத்திற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…

*தீபாவளி* *தினத்தன்று* *”GULLY” திரைப்பட* *ஆரம்ப பூஜை*

தீபாவளியன்று “Gully” என்ற திரைப்பட தலைப்பில் தமிழ் பைலட் திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை சிவஸ்ரீ கனக கிருஷ்ணநாதக் குருக்கள் தலைமையில் கொழும்பு சங்கமித்தை மாவத்தையில் அமைந்துள்ள SR தனியார் கட்டிட வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல்…

விதிமுறைகளை மீறிய தனியார் பேருந்து ஊழியர்களுக்கு தண்டபணம்

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறியதற்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் இன்றிப் பயணம் செய்த 9 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

மாணவர்களுக்கு மகிழ்ச்சி : பாதணிகள் வவுச்சர் வழங்கும் திட்டம் – 2026 ஆம் ஆண்டில் நடைமுறை

2026 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவெனாக்களிலுள்ள மாணவர்களுக்கு பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு சோடி பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை 2025 ஆம் ஆண்டின் பாடசாலை தவணை முடிவதற்குள் பயனாளிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்கள்,…

நிறுத்தமில்லா நகைச்சுவைக்கு தயாராகுங்கள்! – ‘ ஏமாளிகள் கோமாளிகள்’ வெப்சீரிஸ்

‘ஏமாளிகள் கோமாளிகள்’ (Emalikal Komalikal) — கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சிரிப்பு வெப்சீரிஸ் வேடிக்கை, புத்திசாலித்தனம், குழப்பம் இதெல்லாம் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு கதை! தயாரிப்பு நிறுவனம்: Kesh Film Factory இன்னும் பல நகைச்சுவை…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளர். இன்று அதிகாலை லசந்த விக்ரமசேகர பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த…