Month: November 2025

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தற்கொலை: வெளியானது காரணம்

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தற்கொலை என்பது தீர்வல்ல. இதுவே, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில் சமூகத்தின் பங்களிப்பு, தனி மனிதனுக்குக் கிடைக்காதபோது, அதன் விளைவாக தற்கொலைகள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதனைப்…

வடக்கில் நாளை தாதியர் பணிப்புறக்கணிப்பு

நாளை (13) 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம்…

மாலைதீவு கடலில் சம்பவம் : “அவிஷ்க புத்தா” படகிலிருந்து 5 இலங்கையர்கள் கைது

“அவிஷ்க புத்தா” என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை மாலைதீவு பொலிஸ் சேவை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் 7 ஆம் திகதி மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் வைத்து குறித்த படகு…

டெல்லி வெடிப்பு சம்பவம் – தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் : சந்தேகம்

இந்திய தலைநகர் புதுடெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு இடம்பெற்ற கார் வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த…

கொழும்பில் முச்சக்கர வண்டி திருட்டு அதிகரிப்பு

இலங்கையில் முதலாவது விமானத்தை தயாரிக்கக் முயன்ற #மட்டக்களப்பு இளைஞன் #டிலுக்ஸன் மோகனின் #படுபட்சி நாவல் வெளியீடு இன்று . கடனா scarborough வில்…(செங்கலடி செல்லம் திரையரங்கு உரிமையாளரின் மகன்) இப்பொழுது அவர் அமெரிக்காவில் ஒரு விமானி வாழ்த்துக்கள் சகோதரர்

பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார்

பொலிவூட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 89 ஆவது வயதில் காலமானார். ஹிந்தியில் பொலிவூட் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, பொலிவூட்…

டெல்லி வெடிப்பு: மர்ம காருடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது – தொடரும் விசாரணை

டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ புகையிரத நிலையத்தின் முதலாம் இலக்க நுழைவாயிலுக்கு அருகே நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இதுவரையில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில், குறித்த வெடிப்பு சம்பவத்தின் மையமாக செயற்பட்ட…

தலாவ பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

அநுராதபுரம், தலாவ பகுதியிலுள்ள ஜயகங்க சந்திக்கு அருகில், பாடசாலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் பயணித்த பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக ஆதிகரித்துள்ளது. உயிரிழந்நவர்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவனும் ஒருவர் என்பது…

“கூத்தாடி” அவுஸ்ரேலியாவில் வெற்றிகரமான வெளியீடு!

ஈழக்கலைஞன் செல்வின் தாஸின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 12 வேடங்களில் – 12 கதாபாத்திரங்கள், ஒரு வாழ்க்கையையும் அடையாளத்தையும் கொண்டாடும் ஒரு உண்மை சம்பவத்தின் கதை! – “கூத்தாடி” திரைப்படம் நேற்று (09) அவுஸ்ரேலியாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் வென்றுள்ளது. நடிப்பு:…

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார். இவர் நேற்று (09) இரவு தனது அறையில்…