Month: November 2025

தலாவயில் பயங்கர பஸ் விபத்து

தலாவயில் பயங்கர பேருந்து விபத்து அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும்…

மட்டக்களப்பில் சிக்கிய போலி சட்டத்தரணி

மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி தருவதாகப் பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக, அவர் மீது…

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!

பருத்தித் துறை கடல் பரப்பில் எல்லைத் தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய சட்டவிரோத மீன் பிடியில்…

கல்வி உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

இன்று இடம்பெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதுமுள்ள 2362 பரீட்சை நிலையங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சை…

விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம்: கிரிக்கட் மைதானத்தில் நடந்த சோகம்

இலங்கையில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஓருவர் மைதானத்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆட்டமிழப்பு ஒன்றுக்காக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்க முயன்ற வேளை…

வத்தளையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது

வத்தளை அல்விஸ் டவுன் சந்தி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த காரை துரத்தி பிடித்து முன்னெடுத்த சோதனையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆயுதங்களை மற்றொருவருக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது சந்தேகநபர்…

தகுதி அடிப்படையிலான அரச ஊழியர்கள்

எதிர்காலத்தில் தகுதி அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும், இந்த…

ஐனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மலையக மக்கள்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் கீழ், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கரப்பத்தனைப் பிரதேச தொழிலாளர்கள் நேற்று(09) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதன்படி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தொழிலாளர்கள் பாயாசம்…

அஸ்வெசும தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த…

“போடியார்” சுவிஸ் – ஆரோவ் திரையரங்கில் இன்று முதல்!

இலங்கை, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து பேர்ண் நகரத் திரையிடல்களைத் தொடர்நது சுவிட்சர்லாந்து ஆரோவ் நகரில் மூன்று காட்சிகளாக உங்களை மகிழ்விக்க இருக்கிறது #”போடியார்”# நடுத்தர நீளத் திரைப்படம். திகதி: 09-11-2025நேரம்: 11:00am. | 3:00pm | 4:30pmஇடம்: KIRCHGEMEINDEHAUS ARCHEKIRCHGASSE 6,…

இலங்கை சினிமா