Month: November 2025

களனி கங்கையை அண்மித்து வசிப்போருக்கு எச்சரிக்கை

களனி கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எஹலியகொட, நோர்வூட், யட்டியந்தோட்டை, கலிகமுவ, ருவான்வெல்ல, புலத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவாக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம, கொழும்பு உட்பட பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய…

அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை!

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…

வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம் : திருகோணமலை – மட்டக்களப்பு ரயில் சேவைகள் பாதிப்பு

நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால், இன்று திட்டமிடப்பட்டிருந்த ஆறு நீண்ட தூர நகரங்களுக்கு…

சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை மீள நாடாத்தப்படும் திகதி அறிவிப்பு

மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை இன்று (27) , நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான பரீட்சையை அடுத்த மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்…

மண்சரிவினால் கண்டி மாவட்டத்தில் மாயமான நால்வர்

சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை அச்சுறுத்தல் :அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக இன்றும், நாளை வெள்ளிக்கிழமையும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பான பணிப்புரைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுமாத்ரா கரையோரத்தில் நில அதிர்வு – இலங்கைக்கு அபாயமில்லை

இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா கரையோரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. எனினும், இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை…

நாட்டின் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. பதுளையில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் வெல்லவ பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் பயணம் தடைப்பட்டுள்ளது. அத்துடன் புத்தளம் ரயில்…

இலங்கை சினிமா