சபரகமுவ மாகாணத்திலும் பாடசாலைகளுக்கு விடுமுறை
சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.