Month: January 2026

சட்டவிரோத மதுபானம் தயாரித்த ஒருவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய…

தொழில் நியாய சபை தலைவர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 21ஆம் திகதி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நியாய சபையின் நிலுவையிலுள்ள வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிப்பதே…

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில்

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது…

ட்ரம்பின் ‘சமாதானச் சபையில்’ பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான ‘சமாதானச் சபை’ (Board of Peace) இல் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டின் ஒரு அங்கமாக, இந்த அமைப்பை ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக…

வெனிசுவேலாவைத் தொடர்ந்து கியூபா?- ட்ரம்பின் கியூபா வியூகம் அம்பலம்

வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததாலும், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க எடுக்கும் முயற்சிகளாலும் உத்வேகம் அடைந்துள்ள ட்ரம்ப், தற்போது கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கியூபாவின் கம்யூனிச ஆட்சியைச் சீர்குலைக்க, அந்த அரசாங்கத்திற்குள்ளேயே…

அரச மருத்துவமனைகளின் மருத்துவர்கள் 48 மணித்தியாலங்களில் அடையாள பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8 மணி முதல் 48 மணித்தியாலங்களில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இலவச சுகாதார சேவை…

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர மும்முனைப் பேச்சுவார்த்தை – ஐக்கிய அரபு அமீரகத்தில்

உக்ரைன் போருக்கு தீர்வு காணும் நோக்கில், உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையிலான மும்முனைப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார். இது, டாவோஸில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை…

40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்குமா?

இந்தியாவில் தசாப்த காலங்களாக ஒரு எழுதப்படாத விதி இருந்தது: “20 மற்றும் 30 வயதுகளில் கடுமையாக உழைத்துத் தப்பித்துவிட்டால், 40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்.” ஆனால், அந்த நம்பிக்கை இப்போது சுக்குநூறாக உடைந்து வருகிறது. கடந்த காலங்களில்…

எதிர்வரும் 30ம் திகத்திக்குள் மின்சார சபையை மறுசீரமைப்பு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது இறுதி கட்டத்திலுள்ளதாக எரிசக்தி பிரதியமைச்சர் எம்.எம்.அர்கம் தெரிவித்தார். அத்துடன், இந்த மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர்…

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகள் விரைவில்

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்…

இலங்கை சினிமா