Month: January 2026

நாடு முழுவதும் வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும். இந்த விபத்துக்களில்…

கொடிகாமம் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று (20) தீர்ப்பளித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர்…

900 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

நிட்டம்புவ பகுதியில் சுமார் 900 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 61 கிலோ 838 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றிவளைப்பின் போது…

ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து வானிலை மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை…

பிராங்கோபோன் குடியேற்றத்தில் புதிய மாற்றம் கனடாவில்

கியூபெக் மாகாணத்திற்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 5,000 கூடுதல் நிரந்தர வதிவிட (PR) இடங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனவரி 19, 2026 அன்று மன்க்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், கனடாவின் குடிவரவு அமைச்சர்…

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானம் 

மாளிகாவத்தை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (21) காலை 8 மணி முதல் 24 மணி…

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணை இன்று

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகின்றது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி…

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் கல்வி அமைச்சு அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கிணங்க ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதென…

“மாணவர்களின் மதிய உணவு நிதியில் கணவருக்கு பிறந்தநாள் விருந்து: ஊழல் நிரூபிக்கப்பட்ட அதிபருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால் சர்ச்சை!”

மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவர்களின் மதிய உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட ஆறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இந்தத் தகவலை வடமத்திய மாகாண பிரதம செயலாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவத்தின் பின்னணிகடந்த…

“போதைப்பொருள் கடத்தல் பணம் 28 கோடி ரூபாவுடன் ஒருவர் கைது: இப்பாகமுவவில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் அதிரடி!”

சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 283,300,000 (28 கோடிக்கும் அதிக) ரூபா பணம் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்…

இலங்கை சினிமா