இந்தியாவில் 22 குழந்தைகளைப் பலி கொண்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விஷத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குடித்ததால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 22 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

இதன்படி குறித்த மருந்தைத் தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக் கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் அந்த நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு அனுமதி பெற்ற அந்த நிறுவனம், மோசமான உட்கட்டமைப்பு மற்றும் தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளைப் பலமுறை மீறிய போதிலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றி இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக் கழகத்தின் விதிகளின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்ற தங்கள் தயாரிப்புகளை ‘சுகம்’ என்ற தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் குறித்த மருந்து நிறுவனம் தமது தயாரிப்புகள் குறித்து மேற்படி தளத்தில் எதுவும் பதிவு செய்யவில்லை. அத்துடன் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக் கழகத்தின் தரவுத்தளத்தில் இந்த நிறுவனம் எந்த வகையிலும் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் குறித்த விவகாரத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மீதும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக் கழக வட்�