காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் உறுதி

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பதிவான 10,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறிய அவர்,

இந்த விசாரணைகளைத் தொடங்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், மதிப்பிடப்பட்டு ஒதுக்கீடாக 375 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

காணாமல் போனோர் அலுவலகத்தால் அலரி மாளிகையில் நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமல் போனோர் தின நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க ஒரு விரிவான இழப்பீட்டு முறை செயல்படுத்தப்படும்.

பாரபட்சமற்ற நீதியை உறுதி செய்வதற்கான ஒரு புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் அரசாங்கக் கொள்கையில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் மையமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி இன்றைய தினம் வடக்கு கிழக்கில் கண்டனப் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

அதேநேரம், இது வரையான காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 16,966 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை 3,742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறித்த அலுவலகம் சுட்டிககாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *