ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கோன் (Goan) கிளாசிக் 350 மாடலை 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது.
இப்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் மோட்டார் சைக்கிளின் ஸ்பெஷல் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது ஒரு லிமிட்டெட் எடிஷன் மாடல் ஆகும்.
இந்த வேரியண்ட் “ட்ரிப் டீல்” எனும் விசேஷ நிறத்தில் கிடைக்கிறது.
இந்த வேரியண்ட் மொத்தத்தில் 140 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பைக்கின் விலை 5590 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 5.68 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை ரூ.2.37 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) தொடங்குகிறது.
குறிப்பாக ட்ரிப் டீல் நிற வேரியண்ட் ரூ. 2.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) விலையில் கிடைக்கிறது.