ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை காலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.
அவருடன் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மென்டிஸ் மாத்திரம் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது