ஐபிசி தமிழ் குழுமம் பெருமையுடன் வழங்கும் ‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முழுமையாக உள்ளூர் கலைஞர்களின் அதீத நடிப்புத்திறமையின் வெளிப்பாடாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது சாலச்சிறந்ததாக அமைகிறது.

இந்த திரைப்படம் சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது.

அத்துடன் சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளது.

 நவயுகா குகராஜாவின் இயக்கத்தில் மதுனி ஹிரன்யா அழகக்கோன் வற்சுவின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு,இசை – M.ரஜனிகாந்த்,படத்தொகுப்பு – மாருதி.K,தயாரிப்பு வடிவமைப்பு – ஜோசுவா ஹெபி,ஒலி வடிவமைப்பு – சிக பூபதிராஜா,முதன்மை நிர்வாகத் தயாரிப்பாளர் – விக்கி ஆகியோர் ஏனைய அணிசேர் கலைஞர்களாக தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே அனைவரும் குடும்பத்துடன் இந்த திரைப்படத்தை கண்டு களிப்பதற்கு அரிய வாய்ப்பு எதிர்வரும் 19 ஆம் திகதியாகும்.