எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். 

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் எதிர்க்கட்சி தலைவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் குறித்த விபரங்களை கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது. 

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அந்த விபரங்கள் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அவற்றை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமையவே அதற்காக கால அவகாசத்தை வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.