மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட் அகில இலங்கை ரீதியிலான ஆவணப்பட போட்டியில் 500 திரைக்கதையில் இருந்து 40 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த ஆவணப்படங்கள் 5 தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதில் முதலாம் இடத்தை ஹட்டனை சேர்ந்த லிங்.சின்னா( லிங்க பிரகாசம் ஷாந்த குமார்.) மற்றும் இரண்டாம் இடத்தை தலவாக்கலையை சேர்ந்த TK யுவன் ( தியராஜா யுவராஜன்) தொடர்ந்தது மூன்றாம் இடத்தை கொழும்பை சேர்ந்த பிரபாசாவும் நான்காம் இடத்தை கொழும்பை சேர்ந்த மாஸ்க் ஆவணப்படமும் ஜந்தாம் இடத்தை மட்டகளப்பை சேர்ந்த தமிழினியும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் 40 ஆவணப்பட தயாரிப்பாளருக்கும் சான்றிதல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு கொழும்பு ரேணுகா சிடி ஹோட்டலில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல் மூன்று இடங்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்களுடன் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.