சாவடி திரைப்படம் செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் 14 திரையரங்குகளிலும் வெளியிடப்படவுள்ளது.

சாவடி திரைப்படமானது மட்டக்களப்பு வாழ் சினிமா ரசிகர்களுக்காக செப்டெம்பர் 28ம் திகதி மாலை 4. 45 மணிக்கு கல்லடி சாந்தி திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

இந்தத் திரைப்படத்தை தேவா சினி புரொடெக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

தேவா சினி புரொடெக்ஷன் நிறுவனம் தமிழ் சினிமாவில் புதிய படைப்புகளுக்கான தளமாகத் திகழ இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில், துஜா, கயல், சமுத்திரா, சத்தியா, ரகுதாஸ், முரளிதரன், நவரத்தினம் ஜஸ்மின் உட்பட இன்னும் பலர் நடித்துள்ளனர்.

Enter Deva- Aloysius ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் இயக்குநர்கள்: நிருசாந், சார்ள்ஸ் பெர்ணாண்டோ படத்தொகுப்பு: கிரேசன் பிரசாந்த், பின்னணி இசை: எமில் பிரியானந்த், பாடல் வரிகள் மற்றும் இசை: சிக்கலின் மரியோ (நிக்கி-ஆ), ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை: டிவதர்ஷினி, கலை இயக்கம்: புவி ராஜா ஏகுஓ: புஷ்பகாந்தன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு: தேவ-அலோசியஸ். பாடகர்கள்: சுலக்சி புவனேந்திர ராஜா, சுதர்சன் ஆறுமுகம், ஜூடி சரண்யா, சஹிஷ்னா சேவியர், நீக்கி.

தமிழ் திரைப்படத் துறையில் புதியதொரு படைப்புலக பயணத்திற்கு மாபெரும் தொடக்கமாக, தேவா சினி புரொடெக்ஷன்(Deva Cine Production) நிறுவனம் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், நீண்டகாலமாக சினிமாத்துறையில் சிறப்பான படைப்புகள், விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்று வந்துள்ள பிரபல திரைப்பட இயக்குநர் Deva-Aloysiusஇன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தேவா சினி புரொடெக்ஷன் தமிழ் சினிமாவில் தரமான, உளநோக்கமுள்ள மற்றும் சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்தோடு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

இந்த நிறுவனம், அனுபவசாலிகளின் பங்களிப்போடு பல்வேறு புதிய முயற்சிகளையும், இளம் படைப்பாளர்களுக்கும் ஒரு வலுவான மேடையாகவும் செயல்பட உள்ளது.

இந்த புதிய நிறுவனத்தின் தொடக்க அறிவிப்பு, தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆர்வமுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.