தலவாக்கலை நகரில் நேற்று (21) நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து தலவாக்கலை மக்கள் வங்கிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலும் வீதியில் நடந்து சென்ற ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேரும் விபத்தில் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.