அரசாங்கத்தினால் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டு 8 மாதங்களுக்கு பின்னர் உள்ளூர் சந்தையில் வாகன விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகின்றது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர்,ஜனவரி 28 திகதி,வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து புதிய வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்பட்ட நிலையில், வாகன விலைகள் வேகமாக அதிகரித்து காணப்படுவதால், தற்போது மக்கள் புதிய வாகனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகின்றது.