அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom) அறிவித்துள்ளார்.

இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருந்தன.

இந்த விடுமுறை மூலம் அரசு பொதுக் கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலத்துக்கு கவின் நியூசம் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டார்.