பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில அதிர்வை தொடர்ந்து ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு 62 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் இதனால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.