அதிக பணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக பணம் வசூலித்து இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியதற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அக்டோபர் 02 மற்றும் 05ஆம் திகதிகளில் பிரேசில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் தலா ரூ.10,000 மற்றும் ரூ.30,000 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் 40 மற்றும் 48 வயதுடைய இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக முச்சக்கர வண்டி சாரதிகள் கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.