எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்பக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மார்பக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.