யாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டமையே அவரின் மரணத்துக்கான காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
சுகவீனமுற்றிருந்த குறித்த வயோதிப் பெண், தெல்லிப்பழை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் குறித்த அதிகாரி தெரிவித்தார்.