பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல்கள் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் இராணுவத் தளங்கள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னரே குறித்த மோதல்கள் வெடித்துள்ளன.

காபூலில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பின் இந்த மோதல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.