லொஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த கீட்டன், 1970களில் தி காட்ஃபாதர் படங்களில் கே ஆடம்ஸ்-கோர்லியோன் வேடத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார்.
பாதர் ஒப் தி பிரைட், பர்ஸ்ட் வைவ்ஸ் கிளப் மற்றும் அன்னி ஹால் உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காகவும் அவர் அறியப்பட்டார்.
இந்த வேடங்கள் அவருக்கு 1978 இல் சிறந்த நடிகைக்கான அகாடமி விருதைப் பெற்றுத் தந்தன.
கீட்டன் 1970 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவைத் திரைப்படமான லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அவர் இறுதியாக, 2024ஆ ம் ஆண்டு வெளியாகிய சம்மர் கேம்ப் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கீட்டன் ஒரு சிறந்த நடிகை மட்டுமின்றி பல படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு ஹெவன் என்ற வெளியானது, இது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய மக்களின் நம்பிக்கைகளை விபரிக்கிறது.
மேலும், 1995ஆம் ஆண்டு ஆண்டி மெக்டோவல், ஜான் டர்டுரோ மற்றும் மைக்கேல் ரிச்சர்ட்ஸ் நடித்த அவரது அன்ஸ்ட்ரங் ஹீரோஸ் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.