கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வீரசிங்க பினிபுர தேவகே இஷாரா செவ்வந்தி, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார, தினேஷ் ஷ்யாமந்த, டி சில்வா கலுதார, கெனடி பஸ்தியம்பிள்ளை எனும் ஜே.கே. பாய் மற்றும் விக்ரம ஆரச்சிகே தினேஷ் நிஷாந்த குமார ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் நேபாளத்தில் இருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.