ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மாலை 6 மணி (IST) முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோள் மற்றும் வற்புறுத்தலின் பேரில் குறித்த போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.