மலையக மக்கள் மன்றம் (Hill Country People’s Foundation) ஏற்பாடு செய்துள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு பாடசாலைகளில் நடைபெற உள்ளது.

இவ்விழா காலை 9.00 மணிக்கு ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்திலும், நண்பகல் 12.00 மணிக்கு வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளது.

2025ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களும், அதேபோல் க.பொ.த சா/த பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் இவ்விழாவில் பாராட்டப்படவுள்ளனர்.

இந்நிகழ்விற்கு அச்சு ஊடக அனுசரணையாக ‘விழித்திரை’ மாத இதழ் செயல்படுகிறது.
மேலும் அனுசரணையாக மலையக நற்பணி மன்றம் இணைந்து செயற்படுகிறது.