மோசமான பொறியியல் நிலைமை காரணமாக டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட சென்றபோது, 2023 ஜூன் மாதம் வடக்கு அட்லாண்டிக் கடலில் குறித்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அதில் இருந்த ஐந்து பயணிகளும் உயிரிழந்தனர்.
கேப் கோட் அருகே 13,000 அடி ஆழத்தில் சென்றபோது குறித்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு, கப்பல் வெடித்து சிதறியது கண்டறியப்பட்டது. விபத்து நடந்து பல நாட்களுக்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளில் மோசமான பொறியியல் நிலைமையே விபத்துக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது